விபத்தில் மூளைச்சாவடைந்த 13 வயது மாணவன்; பெற்றோரின் செயலால் கதறி அழுத அமைச்சர் காந்தி

By Velmurugan s  |  First Published Dec 1, 2023, 5:07 PM IST

விபத்தில் காயம் அடைந்து மூளைச் சாவு அடைந்த 13 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்களின் கரங்களை பிடித்து கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் விட்டு பாராட்டிய அமைச்சர் ஆர்.காந்தி.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அருள், பரிமளா தம்பதியரின் இரண்டாவது மகன் ராகவேந்திரா(வயது 13). கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

மூளைச்சாவு அடைந்த ராகவேந்திரனின் உடல் உறுப்புகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறுவனின் பெற்றோர் தானமாக வழங்கினர். இதனைத் தொடர்ந்து ராகவேந்திராவின் உடல் இன்று நல்லடக்கம் செய்வதற்காக சர்வந்தாங்கள் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ராகவேந்திராவின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து அரசின் ஆணையின்படி  அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

“சாமி கேப்டன் நல்லா இருக்கனும்” விஜயகாந்துக்காக கடவுளுடன் பாசப்போராட்டம் நடத்தும் 5 வயது மழலை

இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அரசு மரியாதையினை செலுத்தினர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்த ராகவேந்திராவின் பெற்றோர்களிடம் அமைச்சர் ஆர் காந்தி ஆறுதல் தெரிவித்ததோடு உடல் உறுப்பு தானம் செய்த அவர்களின் செயல்களை கண்டு இரு கரங்களை கூப்பி தலை வணங்கி கண்ணீர் விட்டு அவர்களின் செயலை வெகுவாக பாராட்டினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும்  மகனின் உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோரிடம் அமைச்சர் கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் விட்டு பாராட்டிய சம்பவம் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அனைவரின் மத்தியிலும் ஆழ்ந்த சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

click me!