மழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 100 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 120 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைவிட்டு விலகிச்செல்லும் மிக்ஜாம் புயல், தற்போது ஆந்திராவின் நெல்லூர் நோக்கி நகர்ந்து வருவதாகவும், மிக்ஜாம் புயலானது நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து மிக்ஜாம் புயல் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை காரணமாக நாளை (5.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்தது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்திற்கு நாளை பொது விடுமுறை கிடையாது என்றும், வழக்கம்போல கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா