திருப்பத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published Dec 16, 2023, 10:59 AM IST

திருப்பத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சு மோட்டர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மஞ்சுநாதன் மற்றும் கீதா தம்பதியர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன. மஞ்சுநாதன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்து உயிரிழந்துவிட்டார். மேலும் கீதா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

Omni Bus Accident: லாரி - தனியார் சொகுசு பேருந்து நேருக்கு நேர் மோதல்.. 2 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

Tap to resize

Latest Videos

undefined

இவர்களுக்கு நந்தினி, நந்தகுமார், குருதியின், பூவரசன் என 4 பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் மூன்றாவது மகனான பூவரசன் (வயது 9) வீட்டின் அருகே உள்ள கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இன்று தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குனிச்சி மோட்டூர் பகுதியில் கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!