குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட குட்நியூஸ்..!

By vinoth kumar  |  First Published Apr 11, 2022, 11:46 AM IST

திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 11 மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


தேர்தல் வாக்குறுதிப்படி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் 6 மாதங்களுக்குள் வழங்க முயற்சிகள் நடந்து வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

குடும்ப தலைவி

Latest Videos

திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 11 மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக அரசு பொய் வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்களை வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. குளிர்பானம் அருந்திய இளைஞர்... அடுத்த சில நொடிகளில் நெஞ்சுவலியால் பலி.!

துரைமுருகன்

இந்நிலையில், வேலூர், காட்பாடி அருகே பாலேகுப்பம் கிராமத்தில் ரூ.13.80 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை அமைச்சர் துரைமுருகன் துரைமுருகன் திறந்து வைத்தார். இதனையடுத்து, பேசிய அவர்;- தேர்தலின் போது கூறியதை போல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது. இன்னும் 6 மாதகாலத்தில் மகளிர்களுக்கு ரூ.1000 மாத உதவி தொகை வழங்கும் திட்டம் துவங்கப்படும்.

உண்மையான உழைப்பு

காட்பாடி, வள்ளிமலை மக்களின் கோரிக்கையை ஏற்று வள்ளிமலையில் அரசு கல்லூரி அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார்கள். இன்னும் ஒரு மாதகாலத்தில் அரசு கல்லூரி தொடங்கப்படும். மேலும், பேசிய அவர் உழைப்பால் மோடி பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்பதை குறிப்பிட்ட அவர் திமுகவில் உழைத்தால் யாரும் எந்தப் பதவிக்கும் வரலாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. காதல் திருமணம் செய்த இரண்டே நாளில் புதுப்பெண் தற்கொலை.. இதுதான் காரணமா?

click me!