ஆம்பூரில் கோர விபத்து.. லாரி மீது வேன் நேருக்கு நேர் மோதல் .. 4 பேர் உடல்நசுங்கி பலி.. பலர் படுகாயம்..!

By vinoth kumarFirst Published Mar 31, 2022, 10:41 AM IST
Highlights

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு வேலைக்காக வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஏற்றிக்கொண்டு வேன் ஆம்பூர் நோக்கி சென்றிக்கொண்டிருந்தது. 

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கோர விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு வேலைக்காக வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஏற்றிக்கொண்டு வேன் ஆம்பூர் நோக்கி சென்றிக்கொண்டிருந்தது. 

4 பேர் பலி 

அப்போது, வேன் சோலூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சுண்ணாம்பு மூட்டை ஏற்றி வந்த  லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கள்ளானது. இதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் பெண் தொழிலாளர்கள் 3 பேர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 மருத்துவமனையில் அனுமதி

மேலும் பலர் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையில் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

click me!