தர்மபுரி மாவட்டம் மந்தனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31). இவர் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன்று காலை தர்மபுரியில் இருந்து வேலூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
ஆம்பூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் மருத்துலமனை மருத்துவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் டயர் வெடித்து விபத்து
தர்மபுரி மாவட்டம் மந்தனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31). இவர் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன்று காலை தர்மபுரியில் இருந்து வேலூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கார் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ராணுவ கேன்டீன் அருகே வந்துக்ெகாண்டிருந்த போது திடீரென காரின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
கார்கள் நேருக்கு நேர் மோதல்
இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக எதிர் திசையில் ஓடியது. அப்போது வேலூரிலிருந்து வாணியம்பாடி நோக்கிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மேலும் எதிரே வந்த காரில் இருந்த 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
மருத்துவர் பலி
உடனே அப்பகுதி மக்கள் சதீஷ்குமார் மற்றும் 2 பெண்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவர் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.