வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால், அவர்கள் இருவருக்கும் உறவு முறை இல்லை என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேலூர் அருகே தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு
வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால், அவர்கள் இருவருக்கும் உறவு முறை இல்லை என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. சாப்பிட்டு விட்டு கீழே போட்ட எச்சில் எலும்பை பொறுக்கி மீண்டும் சுட சுட சூப்..!
விருப்பம் இல்லாத திருமணம்
இந்நிலையில், இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் அவசர அவசரமாக திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். கடந்த 14-ம் தேதி காலை நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து மணமக்கள் பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது யாருக்கும் தெரியாமல் மணப்பெண் தப்பியோடி உள்ளார். மணப்பெண் ஓடியதை அறிந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணப்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை.
மணப்பெண் ஓட்டம்
இதனையடுத்து, அலறியடித்துக்கொண்டு இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண் காதலுடன் சென்றாரா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க;- அடிப்பாவி.. பிள்ளைகளை தவிக்கவிட்டு 2வது முறையாக ஓட்டம்.. இறுதியில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.!