Tamilnadu Rains : 5 நாட்களுக்கு தமிழகத்தில் அடிச்சு ஊத்தப்போகுதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன?

By vinoth kumarFirst Published Jan 26, 2022, 12:37 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலகிறது. அதே நேரத்தில் இரவு நேரங்களில் கடும் குளிர்காற்று வீசி வருகிறது. காலையில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழை இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலகிறது. அதே நேரத்தில் இரவு நேரங்களில் கடும் குளிர்காற்று வீசி வருகிறது. காலையில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழை இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். கடலோ மாவட்டங்களான கடலோர மாவட்டங்கள், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது  முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதேபோல், புதுச்சேரி, காரைக்கால் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தென்காசி, சிவகிரி, வேமலூரில் 3 செ.மீ., உசிலம்பட்டியில் 2 செ.மீ., கோவில்பட்டியில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

click me!