வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணிவரை செயல்பட்ட கடையை கடை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பின்பக்க சுவரை துளையிட்டு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணிவரை செயல்பட்ட கடையை கடை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இரவு காவலர்கள் இருவர் பணியில் இருந்துள்ளனர். இன்று காலை திறந்து பார்த்தபோது, கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டு முதல் தளத்தில் இருந்த நகைகளை கொள்ளையடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, வேலூர் வடக்கு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருடுபோன இடத்தை பார்வையிட்டனர். மேலும், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மோப்ப நாய்க் கொண்டும் கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், அதன் மதிப்பு குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஏற்கனவே திருச்சி லலிதா நகைக்கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு கொள்ள அறங்கேற்றப்பட்ட நிலையில் அந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து போலீசார் நகைகளை பறிமுதல் செய்த நிலையில், மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.