Earthquake: வேலூரில் அதிகாலையில் நிலநலக்கம்.. அலறியடித்துக் கொண்டு வெளியேறிய பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Nov 29, 2021, 8:24 AM IST
Highlights

 மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழகத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூரில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவிகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை புரட்டி எடுத்து வருகிறது. இதனால், குடியிருப்பு வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். உணவு உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் வெள்ளம் வீட்டிற்குள் வருமோ என்ற அச்சத்துடன் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், வேலூரில் இன்று அதிகாலை  4.17 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவிகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதை உணர்ந்து பொதுமக்கள் அச்சம் அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, நவம்பர் 29ஆம் தேதி 4 மணி 17 நிமிடங்கள் 22 வினாடிகள் என்ற மணி நேரத்தில், 25 கிலோமீட்டர் ஆழத்திற்கு வேலூரில் இருந்து 59 கிலோமீட்டர் மேற்குப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.6 என்ற அளவுக்கு பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழகத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

click me!