வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு புவனேஸ்வரி ( 21) மற்றும் 2 மகன்கள் உள்ளனர். புவனேஸ்வரி காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மணிகண்டன் (28) என்பவருக்கும் கடந்த 15-ம் தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு புவனேஸ்வரி ( 21) மற்றும் 2 மகன்கள் உள்ளனர். புவனேஸ்வரி காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மணிகண்டன் (28) என்பவருக்கும் கடந்த 15-ம் தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
undefined
இதையடுத்து புதுமண தம்பதி மணமகள் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி உள்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் புவனேஸ்வரியின் பாட்டி கழிவறைக்கு செல்ல முயன்றார். அப்போது, கழிவறையின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பால் போடப்படிருந்தது. எவ்வளவு தட்டியம் திறக்காததால் தூங்கிக்கொண்டிருந்த பேரன் சிவாவை எழுப்பினார். இதையடுத்து சிவா கதவை தட்டி போதும் உள்ளே இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
இதனையடுத்து, சிவா வீட்டின் வெளியே சென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது புவனேஸ்வரி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைநஙது சிவா கதறினர். உடனே குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று புவனேஸ்வரியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக்கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புவனேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, புவனேஷ்வரிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பதும், தொடர்ந்து படிக்க விரும்பியதும் தெரியவந்தது. விருப்பம் இல்லாமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்தால் புவனேஷ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமான 2வது நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.