வேலூரில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்குமாம்! யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க! மாவட்ட ஆட்சியர் வார்னிங்!

Published : Apr 10, 2025, 11:41 AM ISTUpdated : Apr 10, 2025, 11:44 AM IST
வேலூரில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்குமாம்! யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க! மாவட்ட ஆட்சியர் வார்னிங்!

சுருக்கம்

வேலூர் மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று முதல் ஏப்ரல் 14ம் வரை வட மாவட்டங்களில் 40 °C முதல் 42 °C என்ற அளவில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இன்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்!

பாதுகாப்பு வழிமுறைகள்

* தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.

* லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுகை ஆடைகள், நூர் துணி பருத்தி ஆடைகளை அணிதல் வேண்டும்.

* வீட்டின் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்துக்கொள்ள வேண்டும்.

* மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்திட செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்லவேண்டும்.

* இளநீர், நொங்கு, தர்ப்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளவேண்டும்.

* வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சைசாறு, மோர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்சரை கரைசல், உப்புகலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவைகளை பருகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர்கொண்டு செல்லவேண்டும்.

* கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குமநீர் மற்றும் தீவனம் அளிக்கவேண்டும்.

* கர்ப்பிணி பெண்கள் காலை 10.00 மணி முதல் 3.00 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். வெளியில் செல்லும்போது கையில் குடை மற்றும் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.

* மது, தேநீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவேண்டும்.

* அதிக புரதம்/மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்கவேண்டும்.

* சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்கவேண்டும்.

* வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவர். எனவே இவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும்.

* குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் முடிய வாகனங்களில் தனியாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

எனவே மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வெப்ப பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!