சாலையில் அலட்சியமாக வெட்டப்பட்ட புலியமரம்; லாரி மோதியதில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Oct 23, 2023, 8:07 PM IST

வேலூர் மாவட்டத்தில் வெட்டப்பட்ட மரத்தின் கிளை மீது மோதாமல் இருக்க அவசரமாக திருப்பப்பட்ட லாரி மோதி பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி ஒன்றியம் சாலையோரம் பட்டி கிராமத்தில் கல்லப்பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் என்பவர் சாலையோரம் உள்ள புளிய மரத்தின் பெரிய கிளை  ஒன்றை அனுமதி இன்றி வெட்டியுள்ளார். வெட்டும்போது ஆந்திராவில் இருந்து வந்த சரக்கு லாரி மீது புளியமர கிளை விழாமல் இருக்க லாரியை வலது புறமாக திருப்பி உள்ளார். 

அப்போது சாலையோரம் நாகரத்தினம் மற்றும் நடேசன் என்பவரின் வீட்டின் மீது சரக்கு லாரி மோதியது. லாரிமோதிய வேகத்தில் வீட்டின் முன்னே இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் எழிலரசன் மற்றும் அவருடைய தம்பி முத்துப்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் எழிலரசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அவருடைய உடல் கொண்டு செல்லப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜாநாராயணன் மணி மண்டபத்தை பார்வையிட்ட ஆட்சியர்

முத்துப்பாண்டி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சரக்கு லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். தலைமறைவான  கல்லப்பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர்  மோகனை கைது செய்யக் கோரி எழிலரசனின்  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சாலையோரம் வெட்டிய புளிய மரத்தால் ஏற்பட்ட  விபத்தில் தமிழகத்திலிருந்து ஆந்திரா செல்லும் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

click me!