ஆபத்தை உணராமல் பேருந்தின் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்

By Velmurugan s  |  First Published Oct 17, 2023, 4:55 PM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் அரசுப் பேருந்தின் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியவாறு பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆற்காடு பகுதிக்கு பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி பயிலும் இளைஞர்கள் வேலை செல்வர்கள் என அனைவரும் பயணம் செய்து வருகின்றனர்.

Latest Videos

undefined

இந்த நிலையில் இன்று பள்ளி வேலைநாள் என்பதால் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் சோளிங்கரில் இருந்து ஆற்காடுக்கு செல்லும் அரசு பேருந்தில் கிராமப் பகுதிகளில் இருந்து அரசு பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் முண்டியடித்து கொண்டு பேருந்தில் ஏறினார்கள். பிறகு மாணவர்கள் அனைவரும் பேருந்தின் உள்ளே செல்ல வழி இல்லாததால் படிவில் தொங்கிபடி செல்லும் அவலநிலை ஏற்பட்டது.

நாமக்கல்லில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய நபர்

இருப்பினும் அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்க தொடங்கியதும் மாணவர்கள் ஜன்னல் கம்பிகளில்  கைகளைப் பிடித்தவாறு ஓடிச் சென்று படியில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் காட்சி அனைவரையும் பீதியை ஏற்படுத்தியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எனவே தமிழக போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி பயிலும் இளைஞர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமப் பகுதிகளில் கூடுதல் அரசு பேருந்தை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.

click me!