தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி, மாடு ரயில் மோதி உயிரிழப்பு

Published : Oct 07, 2023, 09:48 AM IST
தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி, மாடு ரயில் மோதி உயிரிழப்பு

சுருக்கம்

திருப்பத்தூர் அருகே  இரயில்வே தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட மாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி மற்றும் மாடு ரயில் மோதி உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த மொட்டையன் என்பவரது மகன் நடராஜன் (வயது 70). இவர் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். நடராஜன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நிலையில், குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மாட்டின் கால் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. 

அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வெஸ்ட் கோஸ்ட் ரயில் அதி வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது நடராஜன் மாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்த ரயில்வே தண்டவாளத்திற்கு ஓடி வந்து மாட்டை தள்ளி உள்ளார். அதற்குள் அதிவேகமாக வந்த ரயில் மோதி மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து.

டிடிவி தினகரனையும், அவரது கட்சியையும் நாங்கள் பொருட்படுத்தியதே கிடையாது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட நடராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  நடராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!