மாணவர்களால் 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட தேக்கு மரங்கள்; அசால்டாக வெட்டி கடத்திய தலைமை ஆசிரியர்

By Velmurugan s  |  First Published Oct 6, 2023, 11:46 AM IST

வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளியில் 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த தேக்கு, சவுக்கு மரங்களை தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு 50 க்கும் மேற்பட்ட தேக்கு மற்றும் சவுக்கு மரங்களை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி காலாண்டு விடுமுறை ஒட்டி வரும் ஒன்பதாம் தேதி வரை விடுமுறையில் உள்ள நிலையில் அனுமதி இன்றி பள்ளி தலைமை ஆசிரியரும், அமமுக பிரமுகருமான துரை என்பவர் திமுக பேரூராட்சி கவுன்சிலர் ரத்தினவேல் ஆதரவுடன் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களை வெட்டி கடத்தியதாகக் கூறப்படுகிறது. 

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளியில் ஒன்று கூடி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் சித்ரா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறையினர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

கிரானைட் முறைகேடு; மு.க.அழகிரியின் மகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

இந்நிலையில் கல்வித்துறை, வருவாய்த்துறை, வனத்துறை உள்ளிட்ட எந்த துறை அதிகாரிகளிடமும் அனுமதி பெறாமல் தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக செயல்பட்டு 10 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்தியதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் மனு  அளித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

புகாரை பெற்றுக் கொண்ட வட்டார கல்வி அலுவலர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் துரை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் வெட்டி கடத்தப்பட்ட தேக்கு  மரங்கள் யாரிடம் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு யார் யாரெல்லாம் உடந்தை என காவல்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோரிக்கை வைத்த 4 நாட்களில் வீடு தேடி வந்த பைக்; ஆட்சியரின் நடவடிக்கையால் மாற்று திறனாளிகள் நெகிழ்ச்சி

திமுக அரசு மரம் வைப்பதாக விளம்பரம் செய்து வரும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட மரத்தினை பாதுகாக்காமல் திமுக கவுன்சிலரின் ஆதரவோடு திருட்டுத் தனமாக வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

click me!