இழப்பீடு வழங்குவதில் மெத்தனம்; ஒரே நேரத்தில் 10 அரசு பேருந்துகள் ஜப்தி - பொதுமக்கள் பாதிப்பு

By Velmurugan s  |  First Published Oct 13, 2023, 6:51 AM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விபத்தில் உயிரிழந்த காவலருக்கு 80 லட்சம் இழப்பீடு வழங்காத நிலையில் 10 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு பகுதியைச் சேர்ந்த காவலர் தீபன். கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஆம்பூர் காவல் நிலையத்தில் பணியை முடித்துவிட்டு குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி  கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது குடியாத்தத்தில் இருந்து சென்ற அரசு பேருந்து காவலர் மீது மோதியுள்ளது. 

சொத்து தகராறில் தம்பியை தீ வைத்து கொன்ற அண்ணன்; நெல்லையில் பரபரப்பு

Latest Videos

undefined

இந்த விபத்தில் காவலர் தீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குடியாத்தம் நீதிமன்றத்தில் தீபனின் மனைவி செல்வியம்மாள், இரண்டு பெண் பிள்ளைகள், திலீப்பின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் என மொத்தமாக 8 பேர் சேர்ந்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் குடியாத்தம் நீதிமன்றம் நீதிபதி  குடியாத்தம் அரசு போக்குவரத்து பணிமனை 80 லட்சத்து 18 ஆயிரத்து 386 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில், இழப்பீடு வழங்க தவறிய  குடியாத்தம் போக்குவரத்து பணிமனைக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன்  10 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் அமீனா மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பேருந்துகளை ஜப்தி செய்தனர். இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்து வசதியின்றி அவதி அடைந்தனர்.

click me!