அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த இளம் கூலித் தொழிலாளி? வாணியம்பாடியில் உறவினர்கள் குற்றச்சாட்டு

By Velmurugan sFirst Published Oct 20, 2023, 11:15 AM IST
Highlights

திருப்பத்தூரில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இளம் கூலித்தொழிலாளி இறந்துவிட்டதாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை, கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்  கூலி தொழிலாளி விஜயகுமார்(வயது 32). தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளியான இவருக்கு திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது  அவரை மருத்துவர்கள்  அறையில் படுக்க வைத்து விட்டு நெஞ்சுவலிக்கு  தேவையான மருந்து மருத்துவமனையில் இல்லை வெளியில் வாங்கி வாருங்கள் என கூறி விட்டு சென்ற மருத்துவர்கள்   நீண்ட நேரமாக அவருக்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் அவரது தாய் அலமேலு மருத்துவர்களை அழைத்து வந்த போது அறையை மூடி கொண்டு சுமார் அரை மணி நேரமாக சிகிச்சை பார்த்து விட்டு வெளியில் வந்த மருத்துவர்கள் விஜயகுமார் இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தங்களுடைய மகன் இறப்பிற்கு மருத்துவர்களே காரணம் எனக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நாம் தமிழர் கட்சி ஆட்சியில், மீனவர்கள் மீது கை வைத்தால் அவர்களை கொலை செய்வோம் - சீமான் அதிரடி பேச்சு

பின்னர் தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் மருத்துவமனை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது தொடர்பாக விஜயகுமாரின் தாய் அலமேலு அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய மகன் விஜயகுமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது நன்றாக நடந்து வந்ததாகவும், அப்போது மருத்துவர்கள் நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் ஊசி இல்லை, வெளியில் வாங்கி வாருங்கள் என்று கூறி விட்டு சென்றவர்கள். 

அமைச்சர் கே என் நேருவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; திமுக பிரமுகரால் பரபரப்பு

நீண்ட நேரமாக எனது மகனுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதாலும் மருத்துவர்கள் தாமதமாக வந்து சிகிச்சை பார்த்ததாலே மகன் உயிரிழந்ததாக  குற்றச்சாட்டும்  அவரது தாய், இது போன்று வேறு யாருக்கும் நடக்க கூடாது சம்பந்தப்பட்ட மருத்துவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

click me!