தந்தையை விசாரிக்க வந்த போலீஸ்; அச்சத்தில் ஓடி ஒளிந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

By Velmurugan s  |  First Published Jul 14, 2023, 5:32 PM IST

குடும்ப பிரச்சினை குறித்து வீட்டிற்கு விசாரணைக்கு வந்த காவலரை பார்த்து பயந்து ஓடி ஒழிந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த தண்டலம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் துளசி (வயது 34), சங்கீதா(30) தம்பதி. இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வபோது கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் துளசி  அதிகப்படியான மது அருந்திவிட்டு தனது மனைவி சங்கீதாவிடம் தனி குடும்பமாக செல்வது குறித்து தகராறு ஈடுபட்டதாகவும் இந்த தகராறு ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொள்ள சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினர் வருவதை கண்ட துளசி தனது 8 வயதுடைய மகன் மணிகண்டனை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறமாக உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று ருக்மணி என்பவரது வீட்டில் பின்புறம் பதுக்கியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

கோயம்பேட்டில் மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார ஒயர் கம்பியின் மீது மணிகண்டன்  தவறுதலாக கையை வைத்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான். இதனைக் கண்ட துளசி கூச்சலிட்டு கதறியதும் சத்தத்தை கேட்ட காவல் துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் உடனடியாக சென்று சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், காவல் துறையினர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளனது. இருப்பினும் துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்டு வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். 

முதல்வர் உள்பட அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி - எச்.ராஜா பேச்சு

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!