திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலம் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த அண்ணன், தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மற்ற பள்ளி ஊராட்சி மேற்கத்தியனூர் பகுதியில் வசிப்பவர் ராஜா (வயது 55). இவருடைய மூத்த மகன் வினோத் (32) தனியார் நூல் தொழிற்சாலையிலும், இளைய மகன் விக்னேஷ் (30) தனியார் வங்கியிலும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருப்பத்தூரில் இருந்து மேற்கத்தியனூர் பகுதியில் உள்ள தங்களுடைய வீட்டிற்கு இரவு சுமார் 1 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அப்பாவு வட்டம் பகுதியில் திருப்பத்தூர் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக சிறு பாலம் அமைக்கும் பணியின் காரணமாக சாலையின் நடுவே மலை போல் மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அறியாத சகோதரர்கள் இருவரும் மண் குவியலின் மீது மோதியதால் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இரவு 1 மணி என்பதால் இவர்கள் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.
undefined
தந்தையை விசாரிக்க வந்த போலீஸ்; அச்சத்தில் ஓடி ஒளிந்த 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
இந்நிலையில் காலை நேரத்தில் அவ்வழியாக சென்றவர்கள் இருசக்கர வாகனம் கீழே கிடப்பதை கண்டு சந்தேகமடைந்து குழிக்குள் பார்க்கும் போது இருவர் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் காவல்துறையினர் சகோதரர்கள் இருவரின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்பேட்டில் மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் பலி
அண்ணன் தம்பி இருவரும் விபத்தில் சிக்கி ஒரே நேரத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.