ராணிபேட்டையில் ஓட்டுநரின் அலட்சியத்தால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்; 2 சிறுமிகள் பலி

By Velmurugan s  |  First Published May 15, 2023, 3:21 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் அருகே, துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய போது கார் திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். கோழி கறி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது உறவினர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் இறந்து விட்டதால், அந்த துக்க நிகழ்வில் பங்கேற்க உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பியபோது, சிப்காட் அருகே உள்ள பெல் சாலையில் தூக்க கலக்கத்தால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபித்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சுமையா பாத்திமா(வயது 17), தபாசம் பாத்திமா(15) ஆகிய இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த மூவர் லேசான காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

Crime News: மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

மேலும் இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை அருகே துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய போது, கார் பள்ளத்தில் கவிழ்ந்து இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி; 2 மாணவர்களை தேடும் பணி தீவிரம்

click me!