எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி தங்க தேர் இழுத்த அதிமுகவினர்

By Velmurugan s  |  First Published May 12, 2023, 6:08 PM IST

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மீண்டும் முதல்வராக வரவேண்டும் என அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள் மாவட்ட வாரியாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டம்  வாலாஜாபேட்டை,  முத்துக்கடை, ஆற்காடு, என மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

9 கோடி ரூபாய் நட்டத்தில் இருந்த கைதறி துறை 20 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குகிறது - அமைச்சர் பெருமிதம்

அதனைத்தொடர்ந்து ஆற்காடு அடுத்த ரத்தனகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் அதிமுக மாவட்ட கழக பொருளாளர் S.M.சுகுமார் தலைமையில் மாவட்ட கழக செயலாளரும் தமிழக சட்டபேரவை ஏதிர்க்கட்சி துணை கொரடா சு.ரவி ஆகியோர் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழகத்தில் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமென சிறப்பு பிரார்த்தனை செய்து தங்கத்தேரை கோவில் முழுவதும் மூன்று வலம் வந்து எடப்பாடியார், எடப்பாடியார் என கோஷங்கள் எழுப்பியவாறு பக்தி பரவசத்தோடு இழுத்துச் சென்றனர்.

அதனைத்தொடர்ந்து கோவில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானத்தை வழங்கினார்கள்.

click me!