ஆசை ஆசையாக திருமணத்திற்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி; சோகத்தில் மூழ்கிய திருமண மண்டபம்

By Velmurugan s  |  First Published Sep 4, 2023, 5:07 PM IST

வாணியம்பாடி அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஷா. இவரது 16 வயது மகன் சிறுவன் அசார். இவர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருந்தார். இந்நிலையில் சிறுவன் அசார் குடும்பத்தினருடன் தும்பேரி ஊராட்சி நாதிகுப்பம் பகுதியில் உறவினர்  சையத் பாஷா என்பவரின்  வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். 

திருமண வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் அருகே விளையாடி கொண்டிருந்த போது அங்குள்ள  இரும்பு கம்பத்தை அசார் பிடித்துள்ளார். அப்போது இரும்பு கம்பத்தில்  இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு உடனடியாக அருகில் இருந்த வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

அடிக்கடி குழந்தை என்பது அன்னைக்கு கேடு; அடிக்கடி தேர்தல் என்பது நாட்டிற்கு கேடு - ஆளுநர் ராதாகிருஷ்ணன் பஞ்ச்

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட உறவினர்கள் கதறி அழுததும் ஒட்டுமொத்த திருமண மண்டபமும் சோகத்தில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடி அருகே உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற போது திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!