திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையின் இயந்திரத்தில் சிக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூா மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் பாலு என்பவருக்குச் சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் அண்டை கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற 15 வயது சிறுவனும் பணியாற்றி வந்துள்ளான். வழக்கம் போல் இன்றும் தொழிற்சாலையில் பணியாளர்கள் பணி செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது சிறுவன் மோகன் நிலக்கரி அரைக்கும் இயந்திரம் அருகே பணியாற்றிக் கொண்டு இருந்துள்ளான்.
undefined
எங்கள் கூட்டணியின் மிகச்சிறந்த விளம்பரதாரர் பிரதமர் மோடி தான் - மும்பையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் நிலக்கரி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டான். இதனை பார்த்த சக பணியாளர்கள் சிறுவனை இயந்திரத்தில் இருந்து மீட்டனர். ஆனால், இயந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.