
வேலூரில் 14 வயது பள்ளி மாணவன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பெரியபாலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு மகன் தாமு (14). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். எந்நேரமும் செல்போனில் ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இதை தாய் கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தாமுவை தாயார் திட்டியதால் கோபித்துக் கொண்ட மொட்டை மாடிக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் மகன் கீழே இறங்காததால் சந்தேகமடைந்து தாய் மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தாமு உயிரிழந்து கிடந்தார். மகன் இறந்ததை கண்டு தாய் அலறியடி கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துது விசாரணை நடத்தி வருகின்றனர்.