காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை தான் கேட்கிறோம்; அமைச்சர் துரைமுருகன்

By Velmurugan s  |  First Published Aug 25, 2023, 9:50 AM IST

காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியை செய்யத் தவறியதால் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.


வேலூர்மாவட்டம், காட்பாடி அருகே உள்ள அம்முண்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே நிழற்குடையும், ஆரிய முத்து மோட்டூரில் பகுதி நேர நியாய விலை கடையை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், கூட்டுறவுத்துறை இணை இயக்குநர் குண ஐயப்ப துரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகா ஏன் டிரிப்யூனல் போகிறார்கள் என எங்களுக்கு தெரியும். நாங்கள் தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரை கேட்கிறோம். கிட்டதட்ட 50 டி.எம்.சி பற்றாகுறையாக உள்ளது. தண்ணீர் இல்லாத காலம் எங்களுக்கு இருக்கிறது என கர்நாடக சொன்னால் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்பதை காவிரி மேலாண்மை குழு முடிவு செய்திருக்க வேண்டும். 

Latest Videos

undefined

அடுத்து எந்த தமிழக அமைச்சர் மீதான வழக்கு மறு விசாரணை தெரியுமா.? பெயரை குறிப்பிட்டு திகில் கிளப்பிய அண்ணாமலை

ஆனால், அதனை அவர்கள் செய்யவில்லை. அவர்களுக்கு உரிமையில்லாத ஒரு போராட்டத்தில் எங்களை இழுக்கப் பார்க்கிறார்கள். 17 ஆண்டுகள் நீதிமன்ற வழக்குகளில் ஒரு நாள் கூட மேகதாது வார்த்தையை பயன்படுத்தவில்லை. உச்சநீதிமன்றத்திலும் அவர்கள் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. இன்றைக்கு மேகதாது என்று சொல்கிறார்கள். கர்நாடகாவுக்கு தண்ணீர் தேவை என்றால் கே ஆர் சாகர் அணையில் இருந்து எடுத்துகொள்ளலாம். மைசூர் மாண்டியாவில் பாஜகவினர் போராட்டம் நடத்துவது அரசியலுக்காக. நாங்கள் இதனை சட்டபடி அனுகுவோம் என்று கூறினார்.

click me!