ஒரு லாரியால் ஒரே நேரத்தில் 22 மின்கம்பங்கள் சாய்ந்தன! இருளில் மூழ்கிய கிராமங்கள்! நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Sep 3, 2023, 12:28 PM IST

மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியில்  மின்கம்பி சிக்கி 22 மின்கம்பங்கள் ஒரே நேரத்தில் கீழே விழுந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியில்  மின்கம்பி சிக்கி 22 மின்கம்பங்கள் ஒரே நேரத்தில் கீழே விழுந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் சென்னையில் இருந்து சேலம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இந்த சாலை அமைக்கும் பணிக்காக மகி மண்டலம் ஏரியிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து சாலை அமைக்கும் பணிக்காக கொட்டி  வருகின்றனர். இந்நிலையில் இரவு மண் ஏற்றி வந்த லாரி மண் கொட்டி விட்டு லாரியின் பின்புறம் இருக்கும் தொட்டியை கீழே இறக்காமல் அப்படியே லாரி ஓட்டுநர் லாரியை இயக்கி வந்ததால் சாலையில் இருந்த மின் கம்பிகள் அந்த லாரியின் தொட்டியில் சிக்கி இழுத்துவரப்பட்டது.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சேலம் பெரியார் பல்கலைக்கழகமா? வியாபார கூடமா? வாடகை விடும் அளவுக்கு அப்படி என்ன தேவை இருக்கு! அன்புமணி!

 இதனால் சுமார் 22 மின்சார கம்பங்கள் உடைந்து கீழே சாய்ந்தன. மின்கம்பங்கள் கீழே சாய்ந்ததால் மகிமண்டபம், பெரிய போடி நத்தம், புதூர் கிராமம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

இதையும் படிங்க;- அதிமுக ஆலோசனை கூட்டத்தின் தேதியை மாற்றிய இபிஎஸ்.. இதுதான் காரணமா?

இதனால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கியது. மண் ஏற்றி வந்த நான்கு டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து வைத்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் தற்போது வரை உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே அதிகாரிகள் தலையிட்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!