திருச்சியில் காவல் நிலைய வாசலில் அனைவரும் சமாதானம் பேசிக்கொண்டிருக்கும் போதே காதலன் காதலியின் கழுத்தில் திடீரென தாலி கட்டியதால் காவல் துறையினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். திருச்சி கே.கே.நகர் அடுத்துள்ள உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவர் தற்போது ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் அண்மையில் வீட்டில் தெரிய வரவே இரு குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இரு குடும்பத்தினரும் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர்.
அப்போது காவல்துறையினர் மற்றொரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருந்ததால் அந்த குடும்பத்தினரை வெளியே நிற்கும்படி கூறினர். இந்நிலையில் வெளியே சென்ற அந்த இரு குடும்பத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அர்ஜுன் திடீரென சிவரஞ்சனியின் கழுத்தில் மஞ்சள் கயிறை கட்டினார். இதை கண்ட பெண்ணின் குடும்பத்தினர் கூச்சலிட்டு சத்தமிட்டனர்.
undefined
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்த அஷ்வின், உதயநிதி - சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
உடனடியாக அர்ஜுன், சிவரஞ்சனியை அழைத்துக்கொண்டு வேகமாக காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றார். பின்னர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இரு குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்ட போது பெண்ணின் குடும்பத்தினர் எங்களுக்கு பெண் தேவை இல்லை என கூறிய உடன் இரு தரப்பினரும் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல காவல்துறை தெரிவித்தனர்.
அரசுப் பேருந்தில் சில்மிஷம் செய்த ராணுவ வீரர்; அதிரடி காட்டிய பெண் காவலர்
இதனையடுத்து பெண் வீட்டார் இனி எங்களுக்கும், பெண்ணிற்கும் சம்பந்தமில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர். மேலும் அர்ஜுன் குடும்பத்தினர் நாங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு செல்கிறோம் என கூறினர். காவல்துறையினர் அவர்களிடம் எழுதி வாங்கிவிட்டு பெண்ணை அவரோடு அனுப்பி வைத்தனர். காவல் நிலைய வாசலில் திடீரென தாலி கட்டப்பட்ட சம்பவத்தால் காவல் அதிகாரிகளும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.