திருச்சியில் 8 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரித்தாலும் இதன் மூலம் இறப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. தற்போது பரவும் கொரோனா வகையானது வீரியம் குறைந்த பரவலாவே உள்ளது.
ஆனால், எந்த பரவலாக இருந்தாலும் இணை நோய் உள்ளவர்களுக்கு மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் இணை நோய் உள்ளவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதே போன்று பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஆனால் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
undefined
34 ஆண்டுகளுக்கு பின் பின் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
இந்நிலையில், நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் 7 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு கர்ப காலத்திற்கான மாதாந்திர பரிசோதனையின் போது இந்த பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
புதுக்கோட்டையில் போட்டி போட்டு மீன்களை அள்ளிய கிராம மக்கள்