திருச்சி மண்டலத்தில் கடந்த 10 நாட்களில் 29 போலி மருத்துவர்கள் கைது - ஐஜி தகவல்

By Velmurugan s  |  First Published Apr 11, 2023, 2:48 PM IST

திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்கள் 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலி மருத்துவர்கள் மீது கடுமையாக நடைவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி மத்திய மண்டல காவல் ஐ.ஜி. கார்த்திகேயன் நேரடி மேற்பார்வையில் திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில், காவல் துறையினர் மற்றும் மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து கடந்த 1-ந்தேதி முதல் போலி மருத்துவர்களை கண்டறியும் பொருட்டு அதிரடி சோதனை நடைபெற்றது. 

இந்த அதிரடி சோதனையின் போது முறையாக மருத்துவப் பட்டயப் படிப்பு படிக்காமலும், போலி உரிமம் வைத்து கொண்டு பொது மக்களுக்கு சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்த 29 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டனர். இதில் புதுக்கோட்டையில் 4 பேர், பெரம்பலூரில் 3 பேர், அரியலூரில் 4 பேர், தஞ்சையில் 5 பேர், திருவாரூரில் 10 பேர். நாகப்பட்டிணத்தில் 3 பேர் என 29 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு; உயிருடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. மேலும் பொது மக்களின் நன்மையை கருதி தொடர்ச்சியாக இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்படும். பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல காவல் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா பாணியில் ஆட்சியர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஜெயந்தி அருவாக்கு அம்மா டாட் காம்

click me!