வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது
வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் இன்றி தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானிலை மைய அறிவிப்பின்படி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மேலும் பிற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை அதிக வெப்பம் வீசுவதால் பொதுமக்கள் வெளியே வருவதை குறைத்துள்ளனர்.
undefined
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் காலை 9 மணி முதலே அதிக வெப்பம் காணப்படும் நிலையில் தூத்துக்குடி உள்ள முத்துநகர் கடற்கரை பூங்காவானது பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பாஜக பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை சோதனைக்கு பரிந்துரை - சத்ய பிரத சாகு தகவல்!
வழக்கமாக முத்துநகர் கடற்கரை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விடுமுறை தினங்களில் அதிக அளவு வந்து காலை முதலே கடலில் நீராடி விளையாடியும் பொழுதை கழிப்பர். ஆனால் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடற்கரை பூங்கா பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.