கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு நீங்கள் செய்தது என்ன? கனிமொழிக்கு நடிகை விந்தியா அடுக்கடுக்கான கேள்வி

By Velmurugan sFirst Published Apr 2, 2024, 3:18 PM IST
Highlights

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில்  கடந்த ஐந்து ஆண்டுகளில் கனிமொழி எம்பி செய்த திட்டங்கள்  என்ன? என அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரும், நடிகையுமான விந்தியா கேள்வி எழுப்பி உள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அதிமுக துணைகொள்கை பரப்புச் செயலாளரும், நடிகையுமான விந்தியா திறந்த வேனில்  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த தேர்தலில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்ற கனிமொழி கடந்த ஐந்து வருடத்தில் இந்த தொகுதியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 

தற்போது மீண்டும்  எதிர்க்கட்சி வேட்பாளர் போன்று மீண்டும் நான் வெற்றி பெற்றால் இதை செய்வேன், அதை செய்வேன் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைத்தார்களா? கஞ்சா, மதுவை ஒழித்தார்களா? திமுக இந்த தேர்தலில் நீட் பற்றியோ, சிஏஏ குடியுரிமை பற்றியோ ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பினார்.

புதுவையில் சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை; சிபிஐக்கு மாற்ற கோரிக்கை

மேலும் தமிழக மீனவர்கள் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திமுகவினர். கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது போல் இந்த தேர்தலிலும் நாங்கள் ஜெயித்தால் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருகிறோம், பெட்ரோல் 75 ரூபாய்க்கு தருகிறோம், டீசல் 65 ரூபாய்க்கு தருகிறோம் என பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது என்றார்.

click me!