சென்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திமுக ஆட்சி அமைத்தவுடன் முதல் கையெழுத்து மது விலக்கு அமல் என உறுதியளித்தார்.
சொத்துவரி, பத்திரப்பதிவு பல மடங்கு உயர்த்தி வாழ்வாதாரத்தை சீர்குலைய செய்ததே திமுக அரசின் சாதனை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றிய பகுதியில் துவங்கி திருமங்கலங்குறிச்சி, வடக்கு இலந்தைகுளம், தெற்கு இலந்தைகுளம், ஆத்திகுளம், மானங்காத்தான், அய்யனார்ஊத்து, கயத்தாறு பேரூராட்சி வார்டு பகுதி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
undefined
இதையும் படிங்க: Edappadi Palaniswami : "கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் திணறிய திமுக" - காஞ்சிபுரத்தில் பேசிய EPS!
முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில்: சென்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திமுக ஆட்சி அமைத்தவுடன் முதல் கையெழுத்து மது விலக்கு அமல் என உறுதியளித்தார். ஆனால் மதுவிலக்கிற்க்கு பதிலாக கூடுதலாக மது கடைகள் திறந்து தமிழக அரசு மக்களை மது பழக்கத்துக்கு அடிமையாக்கியதே சாதனை. போதை பொருட்கள் கடத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக வெற்றி பெற்றால் கோவை மீண்டும் தொழில் நகரமாகும்; சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக பிரேமலதா பிரசாரம்
மேலும் அதிமுகவில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா உணவகம், லேப் - டாப் ஆகியவற்றை நிறுத்தி, பொதுமக்களுக்கு சொத்துவரி, பத்திர பதிவு பல மடங்கு உயர்த்தி வாழ்வாதாரத்தை சீர்குழைய செய்ததே திமுகவின் சாதனை. விடியல் தருவதாக கூறி பொதுமக்களை இருளில் தள்ளிவிட்டது எனவும் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகி விட்டதாக தெரிவித்தார்.