தூத்துக்குடி கடற்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை..

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ள நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dead body of a man in a rotting condition on Tuticorin beach..Police investigation..  Rya

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடப்பதை கண்ட அந்த பகுதி நாட்டு படகு மீனவர்கள் உடனடியாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் அழுகிய நிலையில்  கரை ஒதுங்கி கிடந்த அந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தது யார் எந்த பகுதியை சார்ந்தவர் என்பது குறித்தும் இறந்தவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Latest Videos

பொதுமக்கள் அதிர்ச்சி! புதுச்சேரியில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வாய்க்காலில் வாலிபர் சடலம்!

அதே போல் சமீப நாட்களாக கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பீடி இலை ,கஞ்சா,மாத்திரைகள்,போன்ற பொருட்கள் கடல் வழியாக கடத்தப்பட்டு வருகின்றது ஒரு வேலை அந்த விசயத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டார என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிமையில் இருந்த காதலர்களை மிரட்டி செயின் பறிப்பு; ஆயுதப்படை காவலரை சுத்து போட்டு தூக்கிய போலீஸ்

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image