நீங்க பேசுனா போதும் அக்கா; கனிமொழியை அன்பால் பூரிப்படைய வைத்த தூத்துக்குடி மக்கள்

By Velmurugan sFirst Published Apr 1, 2024, 11:56 PM IST
Highlights

தூத்துக்குடியில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்ட மக்களை பார்த்து எம்.பி. கனிமொழி நெகிழ்ச்சி அடைந்தார்.

திமுக துணைப்பொதுச் செயலாளரும், தற்போதைய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மீண்டும் தூத்துக்குடி தொகுதியிலேயே நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். ஒவ்வொரு நாளும் தூத்துக்குடி மட்டுமல்லாது கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் சேர்த்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரசாரத்தின் போது ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையிலும் மத்திய அரசை குறை கூறியும், திமுக கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமாக எடுத்துக் கூறி பிரசாரம் செய்து வருகிறார். மேலும் கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதியில் நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பக்கத்துவீட்டு கதவை தட்டி பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த ஆசாமி; அதிர்ச்சியில் அலறிய குடும்ப பெண்

அந்த வகையில், இன்று அவர் பிரசாரத்திற்காக தூத்துக்குடி மாவட்டம் தாமஸ் நகர் வழியாக அவர் வேறு பகுதிக்கு பிரசாரத்திற்கு செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இதனை அறிந்து கொண்ட அப்பகுதி மக்கள் திடீரென சாலையில் கூடினர். கனிமொழிக்கு சாலையின் இரு புறமும் நின்று கொண்டு வரவேற்பு அளிப்பார்கள் என்று காவல் துறையினர் காத்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கனிமொழியின் பிரசார வாகனத்தை மறித்தனர்.

ஒன்றும் இல்லாத நிராயுதபாணியாக நிற்கின்றேன் - ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் குமுறல்

இதனால் பாதுகாப்புக்கு வந்த அதிகாரிகள் பதறிப்போனார்கள். யாரும் எதிர்பாராத விதமாக, நீங்கள் எங்கள் பகுதியில் பிரசாரம் செய்ய வேண்டும் என கூடியிருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் கூறியது சரியாக கேட்காத நிலையில், என்ன சொல்றீங்க? என்ன சொல்றீங்க என கனிமொழி மீண்டும் மீண்டும் கேட்க, நீங்க மேல ஏறி பேசுனா மட்டும் போதும் அக்கா என கூட்டத்தில் இருந்து அன்பாக குரல் எழும்பவே அதனை கேட்டு கனிமொழி பூரிப்படைந்தார்.

அதன் பின்னர் துளியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வாகனத்தின் மேல் நின்று பொதுமக்களின் இத்தகைய அன்புக்கு தலைவணங்குவதாகக் கூறி சிறிது நேரம் பிரசாரம் செய்தார்.

click me!