ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டு கொன்றதை தவிர அதிமுக எதுவும் செய்யவில்லை - கனிமொழி விமர்சனம்

By Velmurugan s  |  First Published Apr 5, 2024, 8:12 PM IST

10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக தூத்துக்குடி மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை, ஆட்சி காலத்தில், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டு கொன்றது மட்டும் தான் அவர்கள் செய்தது என கனிமொழி விமர்சித்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எப்போதும் வென்றான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, 10 வருடமாக அதிமுக ஆட்சியில் இருந்தபோது இந்த பகுதி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அவர்கள் செய்தது ஒன்றே ஒன்று, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரைக் கொலை செய்தனர்.

அதையும் தாண்டி விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பாஜக கொண்டு வரும் போதும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்த போதும் அதனை ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள். இன்றைக்கு நாங்கள் வேறு, அவர்கள் வேறு என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். வெள்ள பாதிப்பின் போது தமிழகத்திற்கு வராத பிரதமர் மோடிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

நீங்கள் தான் எனக்கு குடும்பம் மாதிரி; வாக்காளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி

நேற்று பாஜக கூட்டணிக் கட்சி இங்கு நிற்கிறது. அந்த கட்சியோட தலைவர் வந்து, அவர் எந்த கட்சிக்கு ஓட்டு கேட்க வேண்டும் என்றுகூட தெரியவில்லை. அவர் பேசும்போது, கனிமொழி வெளியே இருந்து வந்தவர். அவரின் வேட்பாளர் இங்கே இருக்கின்றார் என்று பேசினார். நான் சொல்கிறேன், அவர்களின் வேட்பாளர் வீட்டை விட்டு வெளியே கூட வர மாட்டார்.

கோவை அருகே மகன், மகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்; பசியின் கொடுமையால் நிகழ்ந்த சோகம்?

நான் தூத்துக்குடியில் வெற்றி பெற்றால் திரும்பி வரமாட்டேன் என்று சொன்னார்கள், தூத்துக்குடி மாவட்டம் என்பது என்னுடைய இரண்டாவது தாய் வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த மாவட்டத்திற்கு நான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய கோரிக்கை, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று  இருக்கிறது. அந்த மேம்பாலத்திற்கான அனுமதி பெற்று மேம்பாலம் கட்டும் பணி துவங்கவிருக்கிறது. எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்” என்று பேசினார்.

click me!