ஆசை ஆசையாய் காத்திருந்த மணம்பெண்.. இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை.!

Published : Sep 09, 2022, 04:33 PM ISTUpdated : Sep 09, 2022, 04:34 PM IST
ஆசை ஆசையாய் காத்திருந்த மணம்பெண்.. இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை.!

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்தவர் மாரியப்பன். உப்பள தொழிலாளி. இவரது மகன் ஜெகதீஷ் (26). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில். இவருக்கும் பழையகாயல் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. 

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெண் வீட்டார் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்தவர் மாரியப்பன். உப்பள தொழிலாளி. இவரது மகன் ஜெகதீஷ் (26). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில். இவருக்கும் பழையகாயல் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இவர்களது திருமணம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

இதையும் படிங்க;- திருமணமான 5வது நாளில் இளம்பெண் ஆணவக்கொலை? நடந்தது என்ன.. வெளியான பகீர் தகவல்..!

 இன்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்த ஜெகதீஷ் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தார். அப்போது அவர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் புதுமணப்பெண் ஆகியோர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். 

இதையும் படிங்க;- ச்சீ.. நண்பன் என நம்பி வீட்டில் விட்டால்.. மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!