மழை நிவாரணத்தை கூடுதலாக வழங்க சொல்லும் அண்ணாமலை நிதியே கொடுக்காத மத்திய அரசை கேள்வி கேட்காதது ஏன்? கீதா ஜீவன்

By Velmurugan s  |  First Published Feb 17, 2024, 10:59 AM IST

மழை பாதித்த மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறும் அண்ணாமலை நிதியே வழங்காத மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பாதது ஏன் என அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பி உள்ளார்.


தூத்துக்குடி உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கான  பொதுக்கூட்டம் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டார்.

பிரதமர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட என் மண் என் மக்களின் யாத்திரை நிறைவு விழா தேதி திடீர் மாற்றம்

Latest Videos

undefined

அப்போது அவர் பேசுகையில், வரும் 25ம்தேதி மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார். அப்போது  பாதிக்கப்பட்ட மீனவர்கள்  உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். 

கேட்ட சீட்டு கிடைக்காவிட்டாலும் திமுக உடனான கூட்டணி தொடரும் - துரை வைகோ

ஆனால் பிஜேபி தலைவர் அண்ணாமலை மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி காணாது. கூடுதலாக பத்தாயிரம் வழங்க வேண்டும் என அவர் கூறி வருகிறார். ஆனால் தமிழகம் மழையினால் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை. இதுகுறித்து முதல்வர் கடிதம் எழுதியும் இதுவரை எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை. ஆனால் தமிழக அரசு சாலை, உடைந்த பாலம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி என அனைத்தையும் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

click me!