கோவில்பட்டியில் சுரங்கப்பாதையில் வந்து சிக்கிக்கொண்ட லாரி; ஓட்டுநருக்கு தமிழ் தெரியாததால் வந்த சிக்கல்

By Velmurugan s  |  First Published Feb 14, 2024, 10:40 PM IST

கோவில்பட்டியி்ல் ரயி்ல்வே சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்ட கண்டெய்னர் லாரியால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில்  ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்தப் பாதை வழியாக பேருந்து, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. 

Latest Videos

undefined

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லக்கூடிய கண்டெய்னர் லாரி ஒன்று இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலம் வழியாக தூத்துக்குடி செல்வதற்கு முயன்றுள்ளது. ஆனால் கண்டெய்னர் லாரி சுரங்க பாலத்தின் மேற்பகுதியில் மோதி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரயில்வே சுரங்க பாலம் பகுதியில் மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 

கேரளாவில் திடீரென மிரண்டு பொதுமக்களை அலறவிட்ட கோவில் யானை; வீடியோ வெளியாகி பரபரப்பு

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர், சுரங்க பாலத்தின் மேல் விளிம்பில் தட்டி நின்றிருந்த கண்டெய்னர் லாரியை பின்னோக்கி வரவைத்து பின்னர் மாற்று பாதையில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர். கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த லாரி ஓட்டுநருக்கு தமிழ் தெரியாது என்பதால் ரயில்வே சுரங்க பாலம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை தனக்கு தெரியமால் வந்ததாக தெரிவித்தார்.

click me!