எழுத்தாளர் கி. ராவுக்கு மணிமண்டபம் அமைத்து புகழ் செய்தவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்: வைகோ புகழாரம்!!

By Dhanalakshmi G  |  First Published Sep 20, 2022, 12:28 PM IST

தூத்துக்குடி: கரிசல் இலக்கிய பிதாமகர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பிறந்த சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு மண்டப கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு நினைவு மண்டப கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.


தொடர்ந்து நடந்த நூற்றாண்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில் : கி. ராஜநாராயணன் எழுதிய கதை ஆவணப்படமாக தாமரை இதழில் வந்தது. அவர் எழுதிய கதைகள் எல்லாமே இங்கு வாழ்ந்த மக்களைப் பற்றியது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் இதில் இடம் பெற்ற சென்னா தேவி. அப்பெண் அழகிய பெண். அப்பெண் காதில் அணிந்திருந்த நகைக்காக ஒருவர் கொலை செய்யும் கதை முதல் மரியாதை படத்தில் இடம்பெற்று இருந்தது. இதை பாரதிராஜா கி.ராவிடம் அனுமதி பெற்று காட்சியாக்கினார்.

 கி. ராஜநாராயணன் எழுதும் ஒவ்வொரு கதையிலும் நகைச்சுவை இருக்கும்,சோகமும் இருக்கும் காதலும் இருக்கும். இவ்வளவு இந்த கிராமத்திலிருந்து எழுதிய கி.ராவுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில்பட்டியில் பிரதான இடத்தில் மணிமண்டபம் அறிவித்து, அழகான முறையில் கட்டப்பட்டு வருகிறது, இன்றைக்கு இடைசெவலின் புகழ் மாநிலம் எங்கும் பரவி விட்டது. அவர் எழுத்துக்கள் காலத்தை வென்று நிற்கும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னொருவர் பிறந்து வந்து எழுத முடியாது.

Latest Videos

undefined

Watch : போராட்டத்திற்கு எதிர்பு - ஈரோட்டில் பேக்ரியை சூறையாடிய இந்து முன்னணியினர்! - 10 பேர் கைது!

சிறுகதைகள், கரிசல்காட்டு கதைகள், கரிசல் கட்டு கடுதாசி, குறு நாவல்கள், வட்டார சொல் அகராதி உள்ளிட்ட படைப்புகளை அளித்துள்ளார். கி.ராஜநாராயணன் என்கின்ற மாபெரும் படைப்பாளி, எழுத்து உலக பிதாமகரின் புகழ் இடைசெவல் ஊர் இருக்கும் வரை இருக்கும்'' என்றார். 

நிகழ்ச்சியில், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் கி.ரா‌.வின் மகன் பிரபி,கி.ரா. குடும்பத்தினர், எழுத்தாளர்கள் கி.ரா. வாசகர்கள் மற்றும் இடைசெவல் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Watch : பந்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கடைகள் மீது பாஜகவினர் தாக்குதல்! பந்தலூரில் பரபரப்பு!

click me!