தூத்துக்குடி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித்தலைவருமான லட்சுமிபதி தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கா ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பு அறையில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக இன்று காலை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அரை சீல்கள் உடைக்கப்பட்டு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
undefined
செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டி... வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கதறி அழுத துரை வைகோ
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1622 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன இந்த வாக்கு சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய அதாவது 120 சதவீதம் 1950 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 2111 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு வரும் இயந்திரங்கள் ஆகியவை தேர்தல் அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் ரேண்டம் செய்யப்பட்டுள்ளது அந்த எண்களைக் கொண்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.