எம்எல்ஏ To எம்.பி. ஆக வேண்டும்; திருச்செந்தூரில் சிறப்பு யாகம் வளர்த்து நயினார் நாகேந்திரன் வழிபாடு

By Velmurugan s  |  First Published Mar 23, 2024, 6:53 PM IST

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி பாஜக சட்டமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் திருச்செந்தூரில் சிறப்பு யாகம் வளர்த்து வழிபாடு செய்தார்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தலில் வெற்றி பெற சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜூன் 4-ம் தேதிக்கு மேல், 400  தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி பிரதமராக வர திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினேன். 

பாமக.வும், வேடந்தாங்கல் பறவையும் ஒன்று; அடிக்கடி மாறிவிடுவார்கள் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Latest Videos

undefined

திமுகவிற்கு நல்லது செய்யக்கூடிய எண்ணமே கிடையாது. கடந்த தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பதாக சொன்னார்கள். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 வழங்குவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவதாகத்தான் குறிப்பிட்டுள்ளார்கள். அதை நாங்களே கொடுத்துவிடும். காங்கிரஸ் கட்சியில் 40 எம்பிக்கள் தான் உள்ளனர். தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது. 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிவிப்பை பற்றி திமுகவினர் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளட்டும். அதில் எங்களுக்கு ஒன்றும் பயமில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் நாகரீகமான விமர்சனமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணனின் விமர்சனத்திற்கு பதில் அளித்தார். 

அண்ணாமலையல்ல; அந்த இமயமலையே வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி - பொள்ளாச்சி ஜெயராமன்

தமிழகத்தில் பாஜக இரண்டாவது இடத்திற்கு வரக்கூடாது என கனிமொழி எம்பி சொல்லக்கூடாது. அதனை மக்கள் சொல்ல வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரிகள் அனைவர் வீட்டிற்கும் செல்ல மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்கு தான் செல்வார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு  இடைவெளி இருந்தது. 

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பிடித்ததால் பாஜகவிற்கு சென்றேன். மக்களுக்கு மாநில அரசால் சில விஷயங்களை தான் செய்ய முடியும், மத்திய அரசால் பல விஷயங்களை செய்ய முடியும் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு காரணம் தெரிவித்தார்.

click me!