பெண்கள் சமையல் அறையிலேயே முடங்கி கிடக்க வேண்டும் என்பதற்காக சிலிண்டர் விலை குறைப்பு? கனிமொழி கேள்வி

By Velmurugan s  |  First Published Mar 9, 2024, 1:40 PM IST

வேலை வாய்ப்பை அதிகரிப்பது, வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவற்றை செய்யாமல் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்து பெண்கள் சமையல் அறையிலேயே கிடக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாக எம்.பி.கனிமொழி கருத்து.


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் எம் இ ஆர் எப் அறக்கட்டளை இணைந்து நடத்தும் காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள  குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் தூத்துக்குடி வ உ சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

இதைத் தொடர்ந்து மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகை தந்து சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 26 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மகா சிவராத்திரி; அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மயிலாபூரில் சிறப்பு பிரார்த்தனை

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, சமையல் எரிவாயு விலையை முன்னதாகவே குறைத்து இருக்க முடியும். ஆனால், அப்போது அதனை செய்யாமல் தேர்தல் வரும் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். மகளிர் தினத்தன்று சிலிண்டர் விலையை குறைப்பது  பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டுமே கவலை.  மற்றதை பற்றி கவலை இல்லை என்பது போல் உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்,  எவ்வளவோ விஷயங்களை செய்யலாம்.

திமுக கூட்டணியில் இணைந்த கமலின் ம.நீ.ம.. 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு..

சிலிண்டர் விலையை குறைத்து இருப்பது சமையல் அறையிலேயே பெண்கள் இருக்கக்கூடிய ஒரு விஷயமாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் வருவதால் பிரதமர் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவையும், கனிமொழி எம்பி யையும் விமர்சனம் செய்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாகரீகமாக பேசுபவர்களுக்கு பதில் சொல்லலாம் என்றார்.

click me!