ஸ்டெர்லைட் ஆலையின் மனு தள்ளுபடி; அரசின் வலிமையான சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - முதல்வர் பெருமிதம்

By Velmurugan s  |  First Published Feb 29, 2024, 7:30 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஆலை நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மாவட்ட மக்களின் மிகுந்த போராட்டம், உயிர் தியாகத்தினைத் தொடர்ந்து ஆலையை தடை செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றமும் தீர விசாரித்து உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி; 1750 குடும்பங்கள் பயன்பெறும் என பெருமிதம்

Tap to resize

Latest Videos

இந்த மனுவுக்கு தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு தொடர்ந்து வலுவான வாதங்களை முன்வைத்து வந்தது. இந்நிலையில் இன்று மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ஆலையால் மேற்கொள்ளப்பட்ட விதிமீறல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எந்தவித விதிமீறலிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளதாகக் கூறி பாராட்டு தெரிவித்துள்ளது.

“மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது” பிரதமருக்கு இந்தியிலேயே பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்

இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!