குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி வருகை தந்ததைக் கொண்டாடும் வகையில் இஸ்ரோ இந்த ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டை ஏவியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது.
பிரதமர் மோடி இன்று காலை தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் வைத்து குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்துள்ளார். பிரதமர் பங்கேற்ற விழா முடிவடைந்ததை அடுத்து குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி என்ற சிறிய ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி வருகை தந்ததைக் கொண்டாடும் வகையில் இஸ்ரோ இந்த ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டை ஏவியுள்ளது.
மத்திய அரசு திட்டங்களை மூடி மறைக்கும் தமிழக அரசு: தூத்துக்குடியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
முன்னதாக, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.லட்சுமிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிப்ரவரி 28ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிப்ரவரி 29ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் குலசேகரப்பட்டினத்தில் உள்ள தனது புதிய விண்வெளித் தளத்திலிருந்து ‘ஆர்எச் - 200’ என்ற ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது" எனக் கூறியிருந்தார்.
இதனால் மணப்பாடு கலங்கரை விளக்கம் மற்றும் பெரியதாழை க்ரோய்ன் இடையே கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிமீ) வரை உள்ள பகுதியை 'ஆபத்து மண்டலம்' என்று இஸ்ரோ அறிவித்து, மீனவர்கள் மற்றும் சிறிய கப்பல்கள் அந்த மண்டலத்திற்குள் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்திருந்தார்
திமுக இன்னும் திருந்தவே இல்ல... நாளிதழ்களில் சீன கொடியுடன் விளம்பரம்... அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு