தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக வழக்கத்தை விட 20% உப்பு உற்பத்தி அதிகரிப்பு உப்பு விலை டன் 1600 முதல் 1800 வரை விற்பனை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உப்புத் தொழில் பிரதானமானதாகும். இங்கு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்யும் காலங்களில் மழை பெய்து முழுமையான அளவு உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொய்யாததாலும், வழக்கத்தை விட கோடை வெயில் முடிந்தும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் இருந்ததால் உப்பு உற்பத்தி அதிக அளவு நடைபெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 80 சதவீதம் உப்பளங்களில் உப்பு வாரப்பட்ட நிலையில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளை விட 20 சதவீதம் உப்பு உற்பத்தி அதிகம் நடைபெற்றுள்ளது.
undefined
காதலுக்கு இடையூறு; தந்தையை தீர்த்துக்கட்ட நகை, பணத்தை வழங்கிய 16 வயது சிறுமி காதலனுடன் கைது
தற்போது உற்பத்தி செய்யப்படும் உப்பை உற்பத்தியாளர்கள் தேக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அளவுக்கு அதிகமாக உப்பு உற்பத்தி காரணமாக உப்பின் விலை குறைந்து டன் 1600 முதல் 1800 வரை விற்பனையாகிறது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கிய பின்பு உப்பின் விலை உயரும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.