15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுடலை மணி என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 11 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள மகிழம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுவனின் உறவினர்கள் தட்டப்பாறை காவல் நிலையத்தில் சுடலைமணி மீது அளித்த புகாரின் அடிப்படையில் சுடலைமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கனவுகளை சுமந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யவைத்த நிர்வாகம்; பெற்றோர் ஆதங்கம்
இந்த வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுடலைமணிக்கு ஆயுள் தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.