திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு செல்லும் பாதையில் கழிவு நீர் பெறுக்கெடுத்து ஓடுவதால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மலர்வளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் கோவிலுக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் சாலையில் செல்வதால், துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும், தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் செல்லாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
undefined
அப்பழுக்கற்ற பிரதமர் மோடியை குறை சொல்ல திமுகவிற்கு உரிமை இல்லை - வானதி சீனிவாசன் விமர்சனம்
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் கோவில் சுகாதார வளாக கழிவுநீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், பொறுமை இழந்த பொதுமக்கள் பாதாள சாக்கடைக்கு மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு கேட்பதா? திமுகவுக்கு சீமான் கேள்வி
இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், விரைவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.