மத்திய அரசு தனியார் துறைமுகங்களை ஊக்குவிப்பதால் நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களின் வளர்ச்சி பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால் அதனை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தூத்துக்குடியில் அகில இந்திய துறைமுக ஊழியர் சம்மேளன தலைவர் முகமது ஹனிப்மற்றும் பொதுச் செயலாளர் சத்யா ஆகியோர் கூட்டாக அறிவிப்பு.
தூத்துக்குடியில் அகில இந்திய துறைமுக ஊழியர்கள் சம்மேளன கோரிக்கை விளக்க சிறப்பு கூட்டம் அகில இந்திய தலைவர் முகமதுஹனிப் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர்கள் சத்யா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அகில இந்திய தலைவர் முகமது ஹனிப் மற்றும் பொதுச் செயலாளர் சத்யா ஆகியோர் கூட்டாக செய்தியாளரிடம் தெரிவித்ததாவது, மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் துறைமுகங்களின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றத்தை தருகிறது.
தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சியடைய தேவையான வெளி துறைமுகம் உருவாக்குவதற்காக ஆண்டு அறிக்கையில் எவ்வித நீதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்பட்டால் தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி அடையும். ஆனால் கடந்த காலங்களிள் செய்தது போல் அல்லாமல் லாபத்தில் இயங்கும் துறைமுகங்களின் உபரி நிதியை எடுத்து சேது சமுத்திர திட்டத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
undefined
மத்திய, மாநில அரசுகள் அதற்காக தனி நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்தலாம். லாபத்தில் இயங்கும் துறைமுகத்திலிருந்து நிதியை எடுத்தால் அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு சிறிய துறைமுகங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பெரிய துறைமுகங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் நான்குக்கும் மேற்பட்ட கப்பல் தளங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இவ்வாறு தனியார் துறைமுகங்களை வளர்த்தெடுத்து பிற்காலத்தில் துறைமுகங்கள் அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறது. துறைமுகங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ அரிசி கமிஷன்; ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய சாமானியர்
மேலும் துறைமுக ஊழியர்களுக்கு 2022 முதல் வழங்க வேண்டிய சம்பள உயர்வு மற்றும் போனஸ் பேச்சுவார்த்தையை மத்திய அரசு மற்றும் கப்பல் துறை அமைச்சர் உடனடியாக துவங்கவிட்டால் இந்தியா முழுவதும் உள்ள பெரிய துறைமுகங்களில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.
தரமற்ற சாலை; கேள்வி கேட்ட பொதுமக்களுக்கு தர்ம அடி கொடுத்த திமுக கவுன்சிலர்