
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரும்பு பட்டை மற்றும் அரிவாள் தயாரிக்கும் கூலித் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முத்தலாபுரம் பாலம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவில்பட்டியில் போடப்படாத சாலைக்கு கணக்கு எழுதிய ஊராட்சி நிர்வாகம்
இதில் வேனில் பயணம் செய்த லாலு என்பவர் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும் வேனில் பயணித்த 15 தொழிலாளர்கள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றே கடைசி நாள்..! மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்க..! கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுமா.?
இதே போன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆட்களை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று பாரம் தாங்காமல் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.